8 December, 2022

ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது

இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை முற்றிலுமாக ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் வெடித்திருந்த நிலையில் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Share