மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ்

0
16

தமிழில் சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஹனி ரோஸ். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை ஹனிரோஸ் நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது சினிமாவில் நுழைந்தேன் கிட்டதட்ட 15 வருடங்கள் சினிமாவில் பயணித்து வருகிறேன்.

5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். இந்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்து உள்ளேன் என்று கூறினார்.

இப்படத்தில் நடிக்கும் பொழுது எனது காயங்கள் ஏற்பட்டது மனதளவில் கஷ்டப்பட்டாலும் மிக விரைவில் என்னால் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்துவிட்டது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாய் பிறகு என்ன நிஜமாலுமே பாதிக்கப்பட்டது போல இருக்கிறாய் என்று பலரும் கிண்டலாக கேட்டார்கள்.

ஆனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. தொடர்ந்து ஒரு மாதம் கஷ்டப்பட்டேன் என்கிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் புயலாக வீசிக்கொண்டிருக்கின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு அழகை எடக்கு மடக்காக கருத்துகளை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்