இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த ஜனாதிபதி செயலகம்

0
12

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உயர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை குறைத்து நல்லதொரு பொருளாதார நடைமுறையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கு, கடன் நிலைத்தன்மை குறித்த முறையான திட்டம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த கால அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாத முன்னைய அரசாங்கத்தின் அரசியல் கொள்கையினால் இது தடைப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்துக் கட்சி ஆட்சிக்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் முழு அரசியல் ஸ்திரத்தன்மையுடன் தற்போது நிறுவப்பட்டு மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்து, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தேவையான முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.