சீரியலில் பிரியா பவானி ஷங்கருக்கு நடந்த அவமானம்!

0
14

தமிழ் சினிமாவில் பல இளைஞர்களுக்கு பிடித்தமான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் பிஸியான நடிகையாகவே மாறியுள்ளார்.

இவர், நடிப்பில், மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், யானை, என பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர், அதன் பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானார்.

பல அவமானங்களை சந்தித்த பின் தான் பிரியா பவானி ஷங்கர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். இதற்கு உதாரணமாக சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தாமதமாக வந்துள்ளாராம்.

அப்போது, கோபமடைந்த டைரக்டர், ஏன் இவ்வளவு நேரம், நைட்டு வேற எங்கேயாவது போயிட்டு வந்தியா என வக்கிரமாக கேட்டு திட்டி இருக்கிறார்.

இதனால், கோபமடைந்து மனமுடைந்த பிரியா பவானி ஷங்கர் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுள்ளார். பின் படங்களில் வாய்ப்பு கிடைக்க அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

வெள்ளித்திரை அவமானம் அட்ஜஸ்ட்மெண்ட்டை விட, சீரியலில் நடக்கும் அவமானம் தான் அதிகம் என பல சீரியல் நடிகைகளும் இன்றளவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.