எவ்வளவு காட்டியும் அந்த கதாபாத்திரம் மட்டும் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கும் ஹிரன் – Kiran rathod

0
38

நடிகை கிரண் ரத்தோர் – Kiran rathod தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2002-ம் ஆண்டு ஜெமினி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.இப்படத்திற்கு பிறகு வில்லன், அன்பே சிவம், அரசு, வின்னர் என பல படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கிரண் விக்ரம், விஜய், அஜித், பிரசாந்த், கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் தனது அந்த மாதிரியான நடிப்பால் பல ரசிகர்களை ஈர்த்துள்ளார். கிரணின் வசீகரத்துக்காக மட்டும் போட்ட படங்களும் உண்டு.

பிரசாந்த் நடித்த வின்னர் படத்தின் மூலம் கிளாமர் ஹீரோயினாக அங்கீகாரம் பெற்றார். படம் முழுவதும் நகைச்சுவையாக எடுக்கப்பட்டாலும், படத்தை வெற்றியடையச் செய்தவர் கிரண். படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி அணிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

கார்த்தி நடித்த சகுனி படத்தில் வில்லனாக வசுந்தரா தேவியாக நடித்தவர் கிரண். அதேபோல் ஆம்பள படத்திலும் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழில் கடைசியாக சுந்தர் சி இயக்கிய முத்தின கத்திரிக்காய் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

ஆரம்பம் முதலே அப்படியான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கிரணுக்கு இது வரை குடும்பம் சார்ந்த கதைகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது சற்று குண்டாக இருக்கும் கிரண், உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கிரண் தனது 40 வயதில் அப்படியான உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். எனவே, அதன் பக்கத்திற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.