8 December, 2022

கொதித்தெழுந்த ஜனனி – ஷாக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள், இலங்கை தமிழில் நீ கோவபட்டா கூட அழகா இருக்கே

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் சாப்பிட்ட தட்டை ஒரு சில போட்டியாளர்கள் கழுவி வைக்காமல் இருந்துள்ளனர். இதனால், சக போட்டியாளர்கள் தட்டை யாரும் சரியாக கழுவி வைக்க மாட்றாங்கன்னு ஜனனியிடம் கூறுகின்றனர். உடனே, ஜனனி ஒவ்வொருவரிடம் சென்று தட்டை யார் கழுவி வைக்கவில்லை என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.

எல்லாம் நான் இல்லை.. நான் இல்லை… என்று கூறுகிறார்கள். அப்போது சற்று கோவப்பட்ட ஜனனி… வீட்டில் எல்லாம் சாப்பிட்ட தட்டை கழுவிதானே வைப்பீங்க.. இதெல்லாம் சரி இல்லை என்று இலங்கை தமிழில் சற்று கோவப்படுகிறார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஜனனி.. நீ கோவப்பட்டாகூட அழகாதாம்மா இருக்கு.. இலங்கை தமிழில் என்ன அழகா என் செல்லம் கோவப்படுது பாரு…. என்று ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் சுற்றுலாவுக்கு வந்தது போல சாப்பிட்ட தட்டை கூட கழுவாமல் பலர் இருப்பதாக ஜனனி குற்றம் சாட்டியுள்ளார்.

நாங்கள் கழிவறையை பயன்படுத்தி விட்டு அப்படியே தண்ணீர் ஊற்றாமல் வந்தால் எப்படி இருப்கும். அப்படி தானே சாப்பிட்ட தட்டை கழுவாமல் செல்வதும் என்றும் ஜனனி குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டும் இன்றி நிறைய உணவுகளை போட்டியாளர்கள் வீண் விரயம் செய்வதாகவும் ஜனனி சுட்டிக்காட்டியுள்ளார்.

“உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை“ பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் உணவை வீண் விரயம் செய்து வருகின்றார்கள்.

இதனை தற்போது ஜனனி தட்டி கேட்டு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளார்.

Share