8 December, 2022

காதலனை இரண்டாவது காதலனுடன் சேர்ந்து மாடியிலிருந்து தள்ளி விட்ட சீரியல் நடிகை

நடிகை நாகவர்த்தினி தெலுங்கு தொடர்களில் நடித்து வருகிறார். படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வருகிறார். சூர்யநாராயணனை 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் பஞ்சாரா ஹில்ச்சில் உள்ள கிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் ராஜமுந்திரியை சேர்ந்த ஸ்ரீநிவாஸை சந்தித்தார். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதையறிந்த சூர்யநாராயணன் காதலியை கண்டித்துள்ளார்.இதனால் நாகவர்த்தினி காதலனை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

அதே வீட்டில் இரண்டாவது காதலனுடன் தொடர்ந்து வசித்து வந்தார். இதையறிந்த முதல் காதலன் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அவரை தன்னுடன் வரும்படி அழைத்தார். இதனால் கோபமடைந்த காதலி, அவரை வெளியேறுமாறு கூறியுள்ளார்.

ஆனால் கேட்காமல் வாக்குவாதம் செய்த சூர்யநாராயணனின் காதலியும், ஸ்ரீநிவாஸும் அவரை 2வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். அவர்கள் உயிருக்கு போராடும் காட்சிகளை பலர் பதிவு செய்து வெளியிட்டனர்.

அதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஐதராபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலி மற்றும் அவரது இரண்டாவது காதலனை கைது செய்தனர். மேலும், விசாரணையில் நாகவர்த்தினிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தது தெரியவந்தது.

Share