8 December, 2022

இளம் பெண் உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம், கணவன் குடும்பம் தான் காரணம்

கேரளாவில் ரயிலில் அடிபட்டு இளம் பெண் உயிரை மாய்த்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஸ்ரீஜீஷ். இவருக்கும் அனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் விபத்தில் அனகா உயிரை இழந்தார்.

இந்த விசாரணையில் ஸ்ரீஜீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனகாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், இதனால் மனமுடைந்த அவர் உயிரை மாய்த்து கொண்டதாகவும் தெரியவந்தது.

அதன்படி, அனகா கர்ப்பமாகி இரட்டை குழந்தைகள் பிறந்ததையும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கூற விடாமல் ஸ்ரீஜீஷும், அவரது குடும்பத்தினரும் தடுத்தனர்.

மேலும் அனகாவின் குடும்ப உறுப்பினர் செல்போன் எண்கள் அனைத்தையும் முடக்கினர். தொடர் துன்புறுத்தல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனையடுத்து அனகாவை இந்த செயலுக்கு தூண்டியதாக ஸ்ரீஜீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Share