9 December, 2022

அப்போ நயன்தாரா செய்து பிரச்சனையில் சிக்கியது, இப்போ அதையே செய்யும் ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

இவர்களது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூர், முண்டோடோ கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தடபுடலாக நடக்கவிருக்கும் ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share