புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்க்கில் சமந்தா, இது என்ன கொடுமை டா..! Samantha

0
43
Samantha

Samantha- அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முழுக்க முழுக்க செம்மரக் கடத்தலை மையமாக வைத்து அவர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் டிரக்கர் மற்றும் மரம் கடத்தல்காரராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Samantha

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார்.

ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதல் முறை. இப்பாடல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். பாடல் தமிழில் மட்டும் ஆடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமந்தாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் அடங்கிய பாடல் வீடியோ ஒன்று தெலுங்கில் வைரலாகி வருகிறது.