எல்லை மீறிய வலிமை, தயாரிப்பாளருக்கு அஜித் சொன்ன ஒற்றை வார்த்தை

0
21

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் நடிகர் அஜித்துடன் ஒரு படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

படம் தொடங்கும் போது ரூ.25 கோடி பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் இடையில் படப்பிடிப்பு சற்று தாமதமானது.

பின் படத்தின் நடிகர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டது. எப்போதோ வெளிவருவதாக இருந்த இப்படம் பல குளறுபடிகளால் தள்ளிப்போனது. தற்போது வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பட்ஜெட் குறித்து சற்று அதிருப்தியில் உள்ளார். இதையறிந்த தல அஜித் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போனி கபூருக்கு வாக்களித்துள்ளார். மேலும் இந்த படம் கண்டிப்பாக குறைந்த பட்ஜெட் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தன் படத்தில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் தல அஜித். படம் நஷ்டம் அடைந்தாலும் தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு ஓட்டத்தை கொடுப்பார். அந்த வகையில் போனி கபூருக்கு மேலும் ஒரு படம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் அஜித்.