உலக அளவில் இந்த வருடம் முதல் 4 இடத்தை பிடித்த தமிழ் படங்கள், வியப்பில் விஜய் ரசிகர்கள் Vijay

0
34

Vijay : கோலிவுட்டில் மாஸ் நடிகர் என்றால் அதுதான் தளபதி. இவரது படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதுமட்டுமில்லாம தளபதி படத்துக்கு ப்ரோமோஷனும் தேவையில்லை. விஜய் படம் போதும். வென்ற பெயர் ஒரு பிராண்ட்.

இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற ஐஎம்டிபி தளம், அதன் பயனர்களின் விருப்பமான டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

vijay

இந்தப் பட்டியலில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 29, 2021 வரை வெளியான படங்கள் அடங்கும். முதல் 10 படங்களில் மூன்று தமிழ்ப் படங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சூர்யா நடித்த ஜெய்பீம் படம் முதலிடத்தைப் பிடித்தது.

இதையடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் டாப் 10 படங்களின் பட்டியலில் மாஸ்டர் படம் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் தனுஷின் கர்ணன் உள்ளது.

vijay

ரசிகர்கள் பார்க்க விரும்பும் திரைப்படங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் Master வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. மேலும், உலக அளவில் டாப் 10 பட்டியலில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.