29 May, 2023

காஜல் அகர்வால் தொடங்கியுள்ள புது தொழில்! என்ன தெரியுமா?

காஜல் அவர்வால்

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார். கடந்த 2020ல் அவர் கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது நீல் கிச்லு என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது.

பிரசவத்திற்கு பிறகு எடையை மீண்டும் குறைத்து தற்போது நடிப்பை மீண்டும் தொடங்கி இருக்கிறார் காஜல். அவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

புது தொழில்

தற்போது காஜல் அகர்வால் புது பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். Kajal by Kajal என்ற பெயரில் அவர் அழகு சாதன பொருட்கள் விற்க தொடங்கி இருக்கிறார்.

தற்போது புது தொழிலில் இறங்கி இருக்கும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Share