கணவனை பிரிந்தாரா மீரா ஜஸ்மின், காரணம் தெரிந்தா அதிர்ச்சி ஆகிடுவீங்க‌ – tamil cinema

0
73

tamil cinema : பல மலையாள நடிகைகளுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. காவ்யா மாதவன், ஜோதிர்மயி, மஞ்சு வாரியர், ஊர்வசி, சரிதா, மம்தா உள்ளிட்ட பலர் கணவரை விவாகரத்து செய்துள்ளனர்.

தற்போது அந்த பட்டியலில் நடிகை மீரா ஜாஸ்மினும் இணைந்துள்ளார். ரன், சண்டக்கோழி, ஆயத்த எழுத்து, திருமகன், மம்பட்டியான் உள்ளிட்ட பல தமிழ் மொழிப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு துபாயில் பொறியாளர் அனில்ஜான் டைட்டஸ் என்பவரை எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டார் மீராஜாஸ்மின்.

அனில்ஜான் டைட்டஸின் முதல் மனைவி கணவரை விவாகரத்து செய்யாமல் மறுமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் முடிந்தது. ஆனால், திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கணவருடன் துபாயில் செட்டிலாகிவிட்டார் மீராஜாஸ்மின். சந்தோசமாக ஊர் சுற்றும் அவரது குடும்ப வாழ்க்கையே புயலாக மாற ஆரம்பித்துள்ளது. மீராஜாஸ்மினின் கணவர் கிளம்பி திருவனந்தபுரம் வந்தார். இருவரும் ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மீராஜாஸ்மின் தற்போது மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 10 கற்பனைகள் படத்தில் நடித்துள்ளார். பூமரம் படத்திலும் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீராஜாஸ்மின் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கணவரை வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் சம்மதிக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் மலையாள பட உலகில் பேசப்படுகிறது.