சிம்ரனின் சாதனையை முறியடித்த த்ரிஷா, வயச கேட்டா ஷாக் ஆகிடுவீங்க‌

0
65

tamil cinema news : பிரஷாந்த் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானார் த்ரிஷா.

அதன்பிறகு 2002ல் சூர்யாவின் மெளனம் பேசியதே என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு லேசா, லேசா போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முக்கிய ஹீரோக்களின் நாயகியாக நடித்தவர் த்ரிஷா. பிரியதர்ஷன் இயக்கிய கோட்டா மேத்தா என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் த்ரிஷா.

tamil cinema news
tamil cinema news

கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த த்ரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், கொடி, அரண்மனை, 96 மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.

கில்லி, விஜய்யுடன் குருவி, அஜித்துடன் கிரீடம், சூர்யாவுடன் மௌனம் பேசியதே, ஆறு, கமலுடன் தூங்காவனம், மன்மதன் அம்பு, தனுஷுடன் கொடி, விஜய் சேதுபதியுடன் 96 என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் த்ரிஷா. சூப்பர் ஸ்டாருடன் த்ரிஷா நடிக்கவில்லை என்று புகார் எழுந்தது. அதையும் பேட்ட படம் செய்தது.

tamil cinema news
tamil cinema news

த்ரிஷாவுடன் அறிமுகமான நடிகைகள் தற்போது அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் த்ரிஷா திரைக்கு வந்து 19 வருடங்கள் ஆகியும் இன்னும் கதாநாயகி யாக இருக்கிறார்.

த்ரிஷா எப்போதும் தன் மனதையும் உடலையும் இளமையாக வைத்திருக்கிறார். அதனால்தான் இன்றைக்கும் கதாநாயகி வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

த்ரிஷாவுக்கு முன் சிம்ரன் திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் நடித்தார். சிம்ரன் படத்தில் அறிமுகமான த்ரிஷா சிம்ரன் சாதனையை முறியடித்துள்ளார்.

tamil cinema news
tamil cinema news

இன்னும் பல படங்கள் வைத்திருக்கும் த்ரிஷா கதாநாயகி வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன், அக்கோ, ராங்கி ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.