இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண்ணை மானபங்க படுத்திய 13 வயது சிறுவன்..!!

13 வயது சிறுவன் ஒருவன் ஹம்பாந்தோட்டை – தங்காலை பகுதியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துக் கொண்ட குற்றச்சாட்டில் கடந்த (03.03.2024) ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த (02.03.2024) ஆம் திகதி மோதரவெல்லை குடாவெல்ல பகுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் தனியாக நடந்து சென்று பார்வையிட்டபோது குறித்த சிறுவன் தனது நாயுடன் வந்து பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார்.பின்னர் அழகான இடத்தை காட்டுவதாக கூறி, அந்த பெண்ணை கடற்கரை அருகே உள்ள வாட்கேயா புதருக்கு அழைத்துச் சென்று மானபங்கம் செய்ததாக திக்வெல்ல, ஹிரிகட்டிய பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட த‌ங்காலை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில சேனாபதி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள்,குறித்த மாணவனை கடந்த (03/03/2024) பிரெஞ்சு பெண் அடையாளம் காட்டியதை அடுத்து கைது செய்தனர்.13 வயதுடைய குடாவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இலங்கை ஒரு அழகான நாடு என்பதால், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறும் தலைமை பொலிஸ் பரிசோதகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *