குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி..!! சிறுமியின் செயலால் வைத்தியசாலையில் பரபரப்பு..!

பாடசாலை மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்து விட்டு குறித்த குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.15 வயது சிறுமியொருவர் வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து கர்ப்பம் தரித்துள்ளார்.குறித்த சிறுமி நேற்றய தினம் மாலை (10.05.2024) தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *