சிறுமியை கடத்தி வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவன்..!!

17 வயது சிறுவன் ஒருவர் 15 வயது சிறுமியை கடத்தி தனது வீட்டில் தங்கவைத்திருந்த குற்றத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்று கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரின் வீட்டில் சிறுமி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டுக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு சிறுவனை கைது செய்தனர்.

மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *