பொலிஸாரிடமிருந்த தப்பிக்க மாடியிலிருந்து குதித்து உயிரை விட்ட 19 வயது யுவதி..!!

யுவதியொருவர் போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த வேளை சுற்றிவளைத்த பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் கொழும்பு ஹோமாகம பிரதேசத்தில் வீடொன்றில் இடம் பெற்றுள்ளது.19 வயதுடைய பாதுக்க பஹல போபே குருன்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம ஹரிபிட்டிய பகுதியில் வீடொன்றில் இரண்டு நபர்களுடன் இணைந்து போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த குறித்த யுவதி, பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்த போது தப்பித்துக் கொள்ளும் நோக்கில் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.அவர் குதித்தபோது மதில் சுவரில் இருந்த இரும்பு கம்பிகள் வயிற்றில் பட்டதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த நபர் ஒருவரின் மனைவி தொலைபேசி மூலம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *