மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு பெண்ணிற்கு நபர் ஒருவர் செய்த மோசமான செயல்..!!

கேகாலை ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் ஈரானிய யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய‌ குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரந்தெனியவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு 24 வயதுடைய ஈரானிய பெண் பல ஈரானியர்களுடன் சென்றுள்ளார்.

அதன்போது, பெண்ணை மசாஜ் அறைக்குள் வரவழைத்த சந்தேகநபர், மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் 41 வயதுடைய கேகாலை ரன்தெனிய மாவட்டத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *