வீட்டில் தனியாக இருந்த வயோதிபருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி..!!

கொழும்பில் வீட்டில் தனியாக இருந்த நபர் ஒருவர் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 67 வயதுடைய கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த முதியவரின் சடலம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இனந்தெரியாத நபர் ஒருவர் இவருடைய வீட்டில் புகுந்து அவரை கட்டையால் தாக்கி கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது . மேலும் சம்பவம் தொடர்பிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *