பொலிஸாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி உயிரை விட்ட குடும்பஸ்தர்..!!

சிலர் பந்தயம் கட்டி மற்றும் பகடைகாய் விளையாடியதால், கொழும்பு – கொட்டாவை ருக்மலே பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.இதேவேளை, பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் நீர் நிரம்பிய குவாரியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் இரவு (18) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் ஹோமாகம நகரின் சீமா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தரப்பினர் பணத்திற்காக பகடைக்காய் ஆடிக்கொண்டிருந்தபோது, ​​திடீரென அந்த இடத்திற்கு பொலிஸார் வந்தபோது, ​​உயிரிழந்த நபருடன் மேலும் 3 பேர் ஓடி, தண்ணீர் நிரம்பிய குவாரிக்குள், சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளனர்.அவர்களில் மூவர் குவாரியில் இருந்து நீந்தி வீட்டிற்கு வந்ததாகவும், ஒருவர் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் குவாரியில் உள்ள தண்ணீரை பம்ப் மூலம் அகற்றிய போது, ​​குவாரியின் அடியில் சிக்கி இறந்தவரின் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *