சம காலங்களில் குழந்தைகளிடையே பரவிவரும் நோய்..!! பெற்றோர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!

தற்போடைய‌ நாட்களில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகி வருவதால் பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.நீண்ட விடுமுறை நாட்களை தொடர்ந்து குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அதிகமாகியுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன.குறித்த‌ அறிகுறிகள் தென்பட்டால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.மேலும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதற்கிடையில், குழந்தைகள் மத்தியில் டைபாய்டு காய்ச்சல் பரவுவது குறித்து குழந்தை மருத்துவர் எச்சரித்துள்ளார்.இந்நிலையில், வயிற்றுப்போக்கு நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *