மக்களிடையே அதிகம் பரவி வரும் ஒருவகையன நோய்..!! நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்..!

ஒருவகையான டினியா எனப்படும் தோல் நோய் நாட்டு மக்களிடையே அதிகம் பரவிவருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.குறித்த தோல் நோயானது தற்போது நாட்டில் நிலவிவரும் வெப்பம் காரணமாகவே ஏற்படுகிறது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் (22-03-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய நிபுணர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இந்நோய் பரவுவதாகவும், இதன் முக்கிய அறிகுறி தோலில் அரிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.எனவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட வலியுறுத்தியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *