வீட்டின் பின்பகுதியில் தனது குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய்..!!

நேற்று முன் தினம் (22/02/2024) குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் உடல் ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.வட்டவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டவளை பொலிஸார், துணி ஒன்றினால் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குழந்தையைப் பெற்றெடுத்த தாய் தப்பியோடிய நிலையில், அவரை கொழும்பில் வைத்து பொலிசார் கைது செய்ததுடன், சம்பவம் தொடர்பில் உதவிய பெண்ணின் கணவர், அவரது மகள் ஒருவர் மற்றும் குழி தோண்ட உதவிய அயலவர் ஆகியோரை கைது செய்துள்ளனர். டயகம பிரதேசத்தை சேர்ந்த (37) வயதுடைய தாய் ஒருவரே சம்பவத்தில் கைதாகியுள்ளார்.இந்நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள சிசு முறைக்கேடாக பெற்றெடுக்கப்பட்ட சிசுவா? சிசு பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பகுதியில் குழி பறித்து புதைக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை செய்து வருகின்றனர்.அதேநேரம், சிசு புதைக்கப்பட்டு ஆறு மாதங்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மீட்கப்பட்ட சிசுவின் உடல் பாகங்கள் உடல் கூற்று பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *