50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளை நூதன முறையில் மறைத்து வைத்திருந்த நபர்..!!

ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளை ப்ளூ டூத் ஸ்பீக்கரில் (Blue tooth speaker) மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் துபாயில் தலைமறைவாக உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய உறவினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *