பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு வேப்பமரத்தால் நேர்ந்த கதி..!! உத்தியோகஸ்தர் படுகாயம்..!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளிள் பயணித்த போது அநுராதபுரம் – கண்டி வீதியில் காவக்குளம் சந்தியில் வைத்து அவர் மீது மரம் விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (17) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று அவர் மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அநுராதபுரம் போதனா பொது வைத்தியசாலை அனுமதிக்கபப்ட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *