பெரிய நன்மைகளை அள்ளித்தரும் சின்ன வெங்காயம்..!!

சின்ன‌ வெங்காயம் சிறியதாக இருந்தாலும் பல நன்மைகளை கொண்டுள்ளது இந்த சின்ன வெங்காயத்தின் அறியப்படாத பலன்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஃபிளாவனோய்டுகள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் போன்ற சத்துக்கள் சின்ன வெங்காயத்தில் நிறைந்துள்ளன.எனவே, சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. கூடுதலாக, சின்ன‌வெங்காயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கலைப் போக்கும்
மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவு. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் சின்ன‌ வெங்காயம் உதவுகிறது.

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு வழங்கும்
இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. அதேபோல் புற்றுநோய் செல்களை வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் கொண்டது. குறிப்பாக, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *