புத்தாண்டை கொண்டாட தயாரகும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை..!! மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தாண்டு கொண்டாட்டங்களில் பௌத்த(புத்தசாசன), கலாச்சாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் நடைபெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (5) கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மூலம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை பதிவு செய்யப்படுவதுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டும் என புத்தசாசனம், சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கே. டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புத்தசாசனத்திற்கு எதிரான, கலாச்சாரத்திற்கு எதிரானவிடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *