தமிழ் இளைஞர் ஒருவரின் கனடாவில் முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்துவதாக‌ கனடாவில் தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.20 வயதுடைய Bradford West Gwillimbury பகுதியை சேர்ந்தஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.கடந்த ஆண்டு பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. எனினும், அவரது குற்றங்கள் நீதிமன்றத்தால் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இது தொடர்பான தகவலை York பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.18 வயதுக்குட்பட்ட ஒருவரைப் போல் நடித்து இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.குறித்த நபரினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவ்வாறானவர்கள் இருந்தால் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *