சேற்று நீரில் அமர்ந்து வித்தியாசமான முறையில் போரட்டம் நடத்திய பெண்..!! போரட்டத்திற்கான காரணம் என்ன..?

பெண் ஒருவர் முன்னெடுத்த போராட்டம் ஒன்று தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.குறித்த பெண் தான் வசிக்கும் பகுதியிலுள்ள வீதியின் மோசமான நிலையை எடுத்துக்காட்வே இவ்வாறு போரட்டத்தை முன் எடுத்துள்ளார்.ஹைதராபாத் மாநிலம் நாகோல் பகுதியில் உள்ள ஆனந்த்நகர் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளார்.

தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள‌ சேற்று நீர் நிரம்பிய குழியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.குறித்த வீதியில் உள்ள குன்று, குழிகளால் மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், இது தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரவே இவ்வாறான போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.மேலும் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *