உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்ற பெண் சடலமாக மீட்பு..!!யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்..!

படுக்கையில் இருந்து இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்படுள்ளார்.குறித்த சம்பவமானது யாழ்ப்பாணம் தாவடி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.இச் சம்பவமானது நேற்று (2024.05.16) நடை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர்.காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த 31 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், இவர் இரவு (15) உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.இருப்பினும் மரணத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில்.பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *