காதலர்கள் உல்லாசமாக இருப்பதை புதருக்குள் மறைந்திருந்து வீடியோ எடுத்த இளைஞன்..!!

காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் காலி தடல்ல கடற்கரையில் காதலர்கள் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது சந்தேக நபர் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக காலி தலைமையக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அதன் படி, தடல்ல கடற்கரைக்கு அண்மித்த புதர்களுக்கு அருகில் உல்லாசமாக இருக்கும் காதலர்களை அணுகும் சந்தேக நபர், அங்கு தங்க வேண்டாம், பொலிசார் வருவார்கள் என கூறி, அருகிலுள்ள பிறிதொரு புதர் மண்டிய இடத்துக்கு காதல் ஜோடிகளை அனுப்பி வைத்துள்ளார்.இப்பகுதி மிகவும் புதர் மண்டியதாகவும், மறைவான இடங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அங்கு காதலர்கள் தங்கள் இஷ்டம் போல் நடந்து கொள்வார்கள். காதலர்கள் அப்பகுதியில் அச்சமின்றி உல்லாசமாக இருந்தபோது, ​​சந்தேக நபர், புதர்களுக்குள் மறைந்திருந்து, அவர்களை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் காதலர்கள் அந்தரங்கமாக உள்ள வீடியோக்களை பணத்துக்காக இணையங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.இந்நிலையில் சந்தேக நபரால் இதுவரை எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை மாணவர்களுடையவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *