தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட‌படி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட‌படி இளைஞன் ஒருவர் மரணித்துள்ளார். குறித்த இளைஞனின் சடலமானது கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் இருந்து கண்டேடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (20.02.2024) இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய கொழும்பு – கிராண்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த ருவன் குமார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *