நெட்டிசன்களின் விமர்சனத்தால் உயிரை விட்ட இளம் தாய்..!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த குழந்தையை குறித்த தாய் சரியான முறையில் கவனிக்க வில்லை என நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வீட்டின் மேல் தளத்தில் இருந்து தாய் துடைப்பத்தை கையில் எடுத்தபோது ​​குழந்தை கை நழுவி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தை கீழே விழ இருந்த நிலையில், அந்த குடியிருப்பு வாசிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தையை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கூரையில் விழுந்து கிடந்த குழந்தையை மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து சொந்த ஊரான காரமடைக்கு வந்துள்ளார்கள்.குழந்தை விழுந்ததை அடுத்து தாய் , சிறிது நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் (18) குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *