கனடாவில் இருந்து வந்த இருவர்களால் யாழ்ப்பாபணத்தில் அசம்பாவிதம்..!!அதிரடியாக கைது..!

கனடாவில் இருந்து வந்த இருவர் யாழ்ப்பாண பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்ததாகவும்,

பணம் தொடர்பான தகராறில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *