நான் இதெல்லாம் பண்ணக்கூடாதா..? நானும் நானும் மனுஷி தானே..!! நடிகை அனிகா ஓபன் டாக்..!

முன்னதாக மலையாள படங்களில் நடித்த அனிகா, கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா.இப்படத்தை அடுத்து இவர் நடித்த மிருதன், நானும் ரவுடி தான், மாமனிதன், விஸ்வாசம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது 19 வயதான அனிகா, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். மேலும் PT சார் என்ற படத்திலும் நடித்து வருகிறார் அனிகா.நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்கள் மூலம் மக்களிடம் பேசப்படும் நடிகை அனிகா நிறைய கிளாமரான உடைகள் அணிகிறார் என்ற பேச்சு உள்ளது.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், சினிமாவில் இருக்கும் பெண்கள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கிறார்கள். கவர்ச்சியாக உடை அணிவது என்னுடைய தனிப்பட்ட விஷயம், ஸ்டைலாக இருக்க பிடிக்கும்.அந்த வகையில் நானும் ஒரு மனுஷி தானே எனக்கும் இது போன்ற ஆசைகள் இருக்காதா? என்று ஓபனாக பேசி இருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டதோடு அவர் தனக்கு எந்த உடை பிடிக்குமோ அந்த உடையை தான் அணிகிறார். இருந்தாலும் அவரும் ஒரு மனிதர் என்று கூறிய விஷயத்தை இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.மேலும் எனக்கு பிடித்திருப்பதால் மாடர்ன் உடை அணிகிறேன். இதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. நானும் மனுஷி தானே என கூறியுள்ளளார் அனிகா சுரேந்திரன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *