அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது அவங்க தான் அப்படி இருப்பாங்க..!! நடிகை தமன்னா வெளிப்படையான பேச்சு..!

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை தமன்னா.
சொல்லப்போனால் நடிகை தமன்னாவிற்கு திரை உலகில் பாரிய ரசிகர் படையே இருக்கின்றது என கூறலாம்.கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் தமன்னா.இந்த படம் ரசிகர் மத்தியில் அதிகம் பேசப்படவில்லை என்றாலும் அதைத்தொடர்ந்து, தமன்னா நடித்த படம்தான் கல்லூரி.

பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்த படத்தில் கல்லூரி மாணவி சோபிகா கேரக்டரில் தமன்னா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அதன்பிறகு விஜயுடன் சுறா, அஜீத் குமாருடன் விஸ்வாசம், கார்த்தியுடன் பையா, தோழா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, தனுஷூடன் படிக்காதவன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமன்னா மாறினார்.

ஏற்கனவே தெலுங்கு படங்களில் தாராள கவர்ச்சி காட்டி நடித்த அனுபவத்தால், பாலிவுட்டிலும் தனது திறமையை காட்ட ஆரம்பித்தார்.ஹிந்தியில் பப்ளி பவுச்சர், பிளான் ஏ, பிளான் பி ஆகிய தமன்னா நடித்த படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தமன்னாவுக்கு கிடைத்தது.தொடர்ந்து ஜீ கர்தா, லாஸ்ட் ஸ்டோரீஸ் ஆகிய படங்களிலும் நடித்தார்.

இவ்வாறு இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், காவாலா பாட்டுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டிருந்தார் இது தமன்னாவை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டது என்றே கூறலாம்.இதனை அடுத்து தற்போது சுந்தர் சி இயக்க தமன்னா நடிப்பில் வெளி வந்திருக்கும் அரண்மனை 4 இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள்.இந்நிலையில் நடிகை தமன்னா படுக்கையறை காட்சியில் நடிப்பதை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “அந்தரங்கள் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை.

நடிகைகளைவிடவும் நடிகர்கள் தான் அந்த மாதிரியான காட்சிகள் நடிக்கும் போது அதிகம பதற்றம் மற்றும் சங்கடமாக இருப்பார்கள். அதை எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன்” என்று தமன்னா கூறியுள்ளார். இது விசித்திரமாக தான் உங்களுக்கு தோன்றும். நடிகர்கள் மனதில் தான் பல கேள்விகள் இருக்கும் என்று ஓபனாக சொன்ன பேட்டியை அடுத்து ரசிகர்கள் வாய் அடைத்துப் போயுள்ளார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *