எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி வித்யாபத்திரனவின் அதிரடி நடவடிக்கை…உடன் அமுலுக்கு வரும் நடவடிக்கை..

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டது.ஆனால் பொருளாதார நெருக்கடியால் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.எனிமேலும் இத்திட்டம் இடை நிறுத்தப்பட மாட்டாது,மேலும் கடந்த வாரம் 20 லட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனி வரும் காலங்களில் மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு இந்த ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *