பொலிஸாரால் விமானப்படை வீரர் சுட்டுக்கொலை..!! நடந்தது என்ன..?

நேற்று இரவு பாதுக்க,அங்கமுவ பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சோதனைச் சாவடிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது,உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீதே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் சோதனைச் சாவடிக்கு அருகில் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பின்னர் பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் விமானப்படை வீரரான 26 வயதுடையவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *