21 March, 2023

பொன்னியின் செல்வன் பூங்குழலியை தவறாக தொட்ட நபர், உண்மையை உடைத்த நடிகை

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக வந்து தன்னுடைய அற்புதமான கேரக்டரை தரமான முறையில் மெர்சலாக நடித்துக் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த பெயரை பெற்றவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பற்றிய கருத்துக்களை தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறா.ர் இந்த அனுபவமானது பல ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் இவர் பூங்குழலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்கள் விரும்பும் நடிகைகளின் வரிசையில் ஒருவரானார்.

தற்போது வெளிவந்திருக்கும் கட்டா குஸ்தி படத்திலும் இவர் சரியான முறையில் விஷ்ணு விஷாலின் பெயரை தட்டி செல்லும் அளவுக்கு நடித்து அந்த கேரக்டராகவே எதார்த்தமாக வாழ்ந்து இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஐஸ்வர்யா தன்னை தவறாக தொட்ட நபரை பற்றி கூறி தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிகழ்வானது பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்துள்ளது.

எனினும் அது ஆறாத வடுவாக அவர் மனதில் பதிந்திருந்ததால் அதை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் எல்லா பெண்களுமே தங்கள் வாழ்க்கையில் மோசமான தொடுதல்களை எதிர்கொள்வார்கள்.

இதில் குட் டச் எது பேட் டச் எது என்பதை சிறு வயதிலேயே நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பாக பேசியிருக்கிறார். இது போன்ற பேட் டச் சிறுவயதில் குருவாயூரில் நடந்தது மேலும் கோயமுத்தூரில் ஒரு படப்பிடி ஒரு படத்தின் பிரமோஷன் போது இது போன்று நடந்தது என்று அடுக்கடுக்காக பேட் டச் பற்றி அவர் தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப அவர்களாகவே உணர்ந்து சூழ்நிலையை அனுசரித்து நடந்தால் மட்டுமே இது போன்ற வன்புணர்வுகளை தடுத்து நிறுத்த முடியும்.

Share