மனிதர்களின் ம ரணத்தால் லட்ச ரூபாய் வருவாயை ஈட்டும் பெண்மணி!

நல்ல நிகழ்வுக்கு வராவிட்டாலும், துக்க நிகழ்வில் கலந்து இறைவனடி சேர்வோர்க்கு மரியாதை செலுத்துவது நம் நாட்டின் வழக்கம்.

இறப்பு முதல் அடக்கம் செய்யும் வரை இதையே தொழிலாக செய்து வருகிறார் கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ருதி ரெட்டி சேத்தி.

மென்பொருள் பொறியாளரான இவரது அந்தியெஸ்த்தி (Anthyesti) எனும் நிறுவனம், 16 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டித் தந்திருக்கிறது.

அப்படி என்ன செய்வார்கள்?

செய்தி வந்த மறு நொடியே கண் இமைக்கும் நேரத்தில் எங்களது பணியை துவங்குவோம்.

முதலில் நாங்கள் இறுதி ஊர்வலகத்துக்கான வாகனத்தை ஏற்பாடு செய்வோம். பின் உடலைப் பாதுகாத்து வைக்கும் குளிர்பதனப் பெட்டி வேண்டுமா? என்றும் கேட்போம்.

இறுதிச் சடங்குக்காக சவ வண்டி கிளம்பியதும், உறவினர்கள் எங்களிடம் உதவி கேட்டால், கொல்கத்தா மாநகராட்சியில் இருந்து இறப்புச் சான்றிதழ் பெற நாங்கள் உதவுகிறோம்.

அவர்கள் விரும்பினால், இறுதிச் சடங்குகள் செய்யும் புரோகிதர்கள் சேவையையும் நாங்கள் அளிக்கிறோம்.

பைசல் நேரத்தில் வரும் வசூல்

நடமாடும் மொபைல் ஃப்ரீசர் அல்லது உடலை பதப்படுத்துதல், வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லுதல், ஆர்ய சமாஜ், குஜராத்திகள், மார்வாரிகள், வங்காளிகள் போன்றவர்களின் குடும்பங்களில் இறந்தவர்களுக்காக செய்யப்படும் இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட சேவைகளைச் செய்கின்றனர். இந்தச் சேவைகளுக்காக 2500 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

பெற்றோர் முதலில் தயக்கம் காட்டினாலும் கணவரின் சம்மதத்துடன் இந்த பணியை துவங்கியிருக்கிறார் ஸ்ருதி.

வேலையை ராஜினாமா செய்த ஸ்ருதி ஐ.ஐ.எம்.தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று படிக்கபோகவிருந்த தருணத்தில், “ஒரு பட்டப்படிப்பு படிப்பதற்காக பணம் செலவழிப்பதற்குப் பதில் சொந்தத் தொழில் தொடங்குவதற்காக அதைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார்.

நம்பிக்கை வைத்தால், முன்னேற்றம் அடைவதற்கு எல்லா வழிகளும் கிடைக்கும்,” என்று ஸ்ருதி-கு அறிவுறித்தினார்.

இதுதான் தொழில் ரகசியமா?

“கொல்கத்தாவில் பல பேர், தங்களுக்குத் தாங்களே தனிமையில் வாழ்கின்றனர். இந்தச் சூழலில் யாராவது ஒருவர், அவர்களின் மறைவுக்குப் பின்னரான சடங்குகளுக்கு உதவி செய்தால், மிகவும் மகிழ்வார்கள்.”

சந்தை நிலவரம் மற்றும் செலவு விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக, ஸ்ருதி, மயானங்களுக்குச் சென்று விவரங்களைச் சேகரித்தார். ஒவ்வொரு நாளும் எத்தனைபேர் தகனம் செய்யப்படுகின்றனர்.

இறுதி ஊர்வலத்துக்கான வாகனக் கட்டணம், பிரேத கிடங்குகள், புரோகிதர்கள், பூஜைகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.

உணர்வுப்பூர்வமான இடைவெளியை அந்தியெஸ்த்தி நிரப்புகிறது. “வாழ்க்கையில் மரணம் என்பது முக்கியமான காலகட்டம். தொழிற்முறையோடும், நேர்மை மற்றும் கண்ணியத்துடன் சேவை ஆற்ற வேண்டிய தருணம் அது,” என்று கூறும் ஸ்ருதி, “நானும், எனது அணியினரும் உணர்ச்சிப்பூர்வமாக அதே நேரத்தில் அமைதியான, உணர்வோடு இருப்பதில் கவனம் செலுத்துகிறோம்.”

இறந்தகாலம் வருங்காலமாகப்போகும் கதை

2020-ல் முகவர்கள் நியமித்து தமது தொழிலை விரிவாக்கம் செய்ய ஸ்ருதி திட்டமிட்டுள்ளார். பணத்தின் மதிப்பு என்ன என்பதையும், மரணம் மட்டும்தான் வாழ்க்கையில் நிச்சயமான ஒன்று என்ற பாடத்தை இந்தத் தொழில் ஸ்ருதிக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று “இறுதியிலும் உறுதி காணும் ஸ்ருதி”-ன் செயல் பெருமிதம் கொள்ள வைக்கிறது.