கூகுள் மூலம் தமிழர்களுக்கு இனி வேலை நிச்சயம்! சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.! அறிமுகம் செப்.20.!

கூகுள் நிறுவனம்,

மக்களுக்கான தேவைகளை அறிந்து அவர்களுக்கான பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம், தற்பொழுது வரும் செப்டம்பர் 20ஆம் தேதி புதிய கோர்மோ (Kormo) என்ற வேலைவாய்ப்பு சேவை தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்புத் தளத்தை, செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கோர்மோ வேலைவாய்ப்பு சேவை, கூகுள் பிளே ஸ்டோரில் பயன்பாட்டுச் செயலியாக அறிமுகம் செய்யப்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

நாக்ரி, டைம்ஸ்ஜாப்ஸ் போன்ற பல வேலைவாய்ப்புத் தளங்கள் முன்பே இந்தியாவில் இருக்கும் நிலையில், கூகுள் நிறுவனமும் இந்த துறையில் கால் பதித்துள்ளது அனைவருக்கும் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களுக்கும், கடுமையான கட்டமைப்புகள் தேவைப்படாத நிறுவனங்களையும் கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிளின் நெக்ஸ்ட் பில்லியன் யூஸர்ஸ் (Next Billion Users) திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, இந்த கோர்மா சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கோர்மா வேலைவாய்ப்பு சேவைக்கான பயன்பாட்டு செயலி, இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் நாட்டில் இந்த கோர்மா சேவையை அறிமுகம் செய்தது. அதற்குப் பின் அந்நாட்டில் உள்ள வேலையில்லாத மக்களில் 50,000 நபர்களுக்கு வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.கூகுளின் கோர்மா சேவைக்கு பங்களாதேஷ் இல் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் உள்ள குவிக்கர்-இன், பாபா ஜாப்ஸ், OLX-இன் அமேசான் ஜாப்ஸ், குவெஸ் கார்ப் போன்ற தளத்திற்குப் போட்டியாக இந்த கோர்மா சேவை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சுந்தர் பிச்சையின் இந்த பலே திட்டத்தை பயன்படுத்தி இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.