ஊழியர்களே தங்கள் சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம்: புதுமையான நிறுவனம் தொடர்பில் இளம்பெண் வெளியிட்ட தகவல்

லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களே தங்கள் ஆண்டு சம்பளத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்ற விதியை கடைப்பிடித்து வருகிறது.

இதனால் ஊழியர்களே தங்கள் ஊதிய உயர்வை முடிவு செய்து வருகின்றனர். லண்டனில் உள்ள GrantTree நிறுவனமே தங்கள் ஊழியர்கள் அவர்களின் சம்பளத்தை முடிவு செய்ய அனுமதி அளித்து வருகிறது.

அதன்படி 25 வயதான சிசிலியா மாண்டுகா என்பவர் தமது ஆண்டு சம்பளமான 30,000 பவுண்டில் இருந்து 37,000 பவுண்டுகள் என இனிமுதல் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

GrantTree நிறுவனமானது இதுவரை தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பில் முடிவு எடுக்கும் உரிமையை அவர்களுக்கே வழங்கி வருகிறது.

இருப்பினும், ஊழியர்கள் இந்த விவகாரத்தில் தாமாகவே முடிவெடுக்க முடியாது. அவர்கள் தங்கள் சக ஊழியர்களிடம் ஊதிய உயர்வு தொடர்பில் விவாதிக்க வேண்டும்.

மட்டுமின்றி வேறு நிறுவனங்களில் இதே பொறுப்புக்கு ஊழியர்கள் பெறும் ஊதியத்திற்கு நிகராக இருக்க வேண்டும் எனவும் கொள்கை வைத்துள்ளனர்.

7,000 பவுண்டுகள் ஊதிய உயர்வுக்காக தாம் அதிகமாக விவாதித்ததாக கூறும் சிசிலியா, ஆனால் தமது சக ஊழியர்கள் இந்த விவகாரத்தில் தமக்கு உதவியதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்தில் தமக்கு அளித்துள்ள அனைத்து பணிகளையும் திறம்பட முடித்துள்ளதாக கூறும் சிசிலியா,

இந்த ஊதிய உயர்வுக்கு தாம் தகுதியானவர் என சக ஊழியர்கள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

GrantTree நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் 45 ஊழியர்களும் தங்கள் ஊதியத்தை தாங்களே முடிவு செய்து வருகின்றனர்.