நடுராத்திரி.. ஆட்டோவில் வந்த சிந்துஜா.. நடு வழியில் மடக்கிய இளைஞர்கள்.. ஓடும்போது கால் முறிந்தது!

சென்னை: ஆட்டோவில் வந்த பெண் டான்சர் சிந்துஜாவை நடுவழியிலேயே மறித்து வேலையை காட்டி உள்ளனர் 2 இளைஞர்கள்.. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதிக்க போய்.. இப்போது சிந்துஜா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சிந்துஜா. இவர் ஒரு நடன கலைஞர். 27 வயதாகிறது. சம்பவத்தன்று இரவு புதுவண்ணாரப்பேட்டை புச்சமாள் தெருவின் வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோவில் டிரைவருடன் அவர் நண்பரும் உடன் இருந்தார்.

எண்ணூர் விரைவு சாலை கக்கன்ஜி நகர் ஜங்ஷன் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோ டிரைவர் திடீரென வண்டியை நிறுத்திவிட்டார். உடனே க த்தியை எடுத்து இருவரும் சிந்துஜாவிடம் நீட்டி, போட்டிருக்கும் நகைகளை கழட்ட சொன்னார்கள்.

இதனால் அ திர்ச்சி அடைந்த சிந்துஜா, கம்மல், மூக்குத்தி, வெள்ளிக்கொலுசு, செல்போன், பர்ஸில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய்.. அனைத்தையும் தந்தார். அவைகளை பறித்து கொண்ட 2 பேரும் அங்கேயே நிற்பதை பார்த்துதும், பயந்துபோன சிந்துஜா, உயிர் தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதில், அப்படியே குப்புற விழுந்து வலது கை முறிவு ஏற்பட்டது. இதைபார்த்த இருவரும் ஆட்டோவில் தப்பி ஓடி விட்டனர்.

அவரது சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த சிந்துஜாவை சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து, சிந்துஜா திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன்படி சம்பந்தப்பட்ட 2 பேரையும் அ திரடியாக கை து செய்தனர். திருவெற்றியூர் வடக்கு மாட வீதியை சேர்ந்த ஆசி பாஷா, திருவெற்றியூர் தியாகராயபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிஷோர் ஆகிய 2 பேர்தான் அவர்கள் என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கை துசெய்யப்பட்டுள்ளனர்.