விராட்கோலியின் சாதனையின் உச்சம்.. அனுஷ்கா சர்மாவின் காதல் கதை.. யாரும் அறிந்திடாத தகவல்.!

உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வந்துகொண்டிருப்பவர் தான் ரன் இந்திய அணி கேப்டன் ரன் மெஷின் விராட் கோலி.

இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி அவர் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானதே. எப்போது முதல் பேட்டிங்கில் ஜொலிக்காத கோலி இரண்டாவது இன்னிங்ஸில் ஜொலிப்பது கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான உச்சத்தை தொட்டுள்ளார்.

”நீ இந்தியாவுக்காக விளையாட வேண்டும்” எனப் பெரும் கனவு கண்டு வளர்த்தெடுத்த அப்பாவை, ரஞ்சி கிரிக்கெட் ஆடும்போது இழந்தார் கோலி.

இந்தியாவுக்காக ஆட ஆரம்பித்த கோலி தந்தையின் இழப்பின் தருணத்தில் கூட கிரிக்கெட்டை விளையாடி விட்டு தான் இறுதிசடங்கிற்கே சென்றார்.

தந்தையின் இழப்பை கண்டு சோர்வடையாமல், நம்பிக்கையாக அண்டர் 19 உலகக்கோப்பையை பெற்று தந்தார். அதன் பின் இந்திய அணியில் விளையாட வாய்ப்பும் தேடி வந்தது.

அப்போது ஐபில் ஏலத்தின் போது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் போட்டிபோட்டுக்கொண்டு எடுத்தார்கள்.

ஆனாலும் அதன் பின்னர் நிறைய சறுக்கல்களையும் விராட் கோலி சந்தித்து வந்தார். அதன் பின்னரும் கவனத்தை சிதற விடாமல் 2011ம் ஆண்டு கோலியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தது. இதோ ரன்மெஷினாக, கிரிக்கெட் கடவுளாக, மாஸ்டர் பிளாஸ்டராக கிங் கோலியாக உயர்ந்து நிற்கிறார்.

சரியாக சொன்னால், 2011 உலகக்கோப்பைக்குப் பிறகுதான் நிகழ்ந்தது கோலியின் எழுச்சி.

அதன் பின்ன பேட்டியளித்த கோலி “நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கியபோது மிகவும் பேஷனோடு, ஆர்வத்தோடு ஆடத்தொடங்கினேன். ஆனால் சின்ன வயது என்பதாலோ என்னவோ என்னுடைய கவனத்தை பாதியில் இழந்துவிட்டேன்.

என் அப்பாவின் திடீர் மரணம் என்னுடைய கவனத்தை மீண்டும் கிரிக்கெட் பக்கம் கொண்டுவந்தது. ஆனால் ஐ.பி.எல் தொடங்கியபோது என்னுடைய ஆட்டத்தில் மீண்டும் சறுக்கல். என் கவனம் கிரிக்கெட்டிலிருந்து விலகி கேளிக்கைகளுக்குச் சென்றுவிட்டது.

என்னுடைய ஆட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரன்கள் எடுக்கத் திணறினேன். இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்டேன். என் வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டம் அது.

என்னை கிரிக்கெட் வீரனாக உருவாக்கியது என் அப்பாதான். அவருடைய கனவு நான் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது. அந்தக் கனவு தகர்ந்தபோது உடைந்துவிட்டேன்.

எல்லா சொந்த விஷயங்களையும் மறந்துவிட்டு கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தினேன். ஒன்றரை வருடம் எதன் மீதும் என் கவனம் திரும்பவில்லை. மீண்டும் இந்திய அணிக்குள் அதுவும், 2011 உலகக்கோப்பை அணியில் ஆட வாய்ப்புக் கிடைத்தது’’ என தெரிவித்தார்.

இன்று அனைத்து போட்டிகளிலும் ஜொலிக்கும் விராட் கோலி காரணம் அவரின் விடா முயற்ச்சியும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆரவம் மட்டுமே அவருக்கு பக்க பலமாக இருந்துள்ளது.

விராட் கோலியை ஆர்வக்கோளாறாகச் சிலர் நினைக்கலாம். ஆனால், மிகவும் பக்குவப்பட்ட மனிதராக, உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உச்சத்தில் நிற்க கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் கோலி.

காதல் ரகசியம்
விராட் கோலி விளையாட்டின் போதே பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முதன்முதலில் ஒரு பிரபல ஷாம்பு விளம்பரத்தில் இணைந்து நடித்த இவர்களது நட்பு மெல்ல மெல்லக் காதலாக மாறியது அனைவரும் அறிந்ததே.

அதன் பின்னர் கல்யாணத்திற்கு பிறகும் கோலி தற்போது வரை மனைவியிடம் பல ஆலோசனைகளை கேட்டு தான் முடிவெடுக்கிறார். அனுஷ்கா சர்மாவும் கோலிக்கு பக்க பலமாக தான் இருக்கிறார்.

எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் திருமணத்திற்கு பிறகு ஆட்டபோக்கு மாறக்கூடும் என சொல்வார்கள் ஆனால் கோலி விஷயத்தில் அப்படி இல்லை என்பதே உண்மை.

இவரின் கடின உழைப்பே இவர் பெரிய உச்சத்திற்கு செல்ல காரணமாக இருக்கிறது. இன்று வரை கோலியை ரசிகர்கள் கொண்டாடி வருவதும் இதனால் தான்.