படித்து முடிப்பதற்கு முன்பே கல்லூரி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்… சம்பளம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

இந்தியாவில் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே கல்லூரி மாணவி ஒருவருக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.

டெல்லி ஐஐடியில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவர் சமீபத்தில் வளாக தேர்வை (campus interview) எதிர்கொண்டார்.

அப்போது மாணவி அளித்த பதில் திருபதிகரமாக இருந்ததால், பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று அவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்து, பணி நியமன ஆணையை அவரது கையில் கொடுத்துள்ளது,

அதில் அவருக்கும் வருடத்திற்கு சம்பளம் 1.45 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் குறித்த மாணவி விரைவில் பணிக்கு சேரவுள்ளார்.

இந்த மாணவி மட்டுமின்றி, இவருடன் படித்த இரண்டு மாணவர்களை ஆண்டுக்கு ரூபாய் 45 லட்சம் மற்றும் ரூபாய் 43 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு டெல்லி ஐஐடியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவ மாணவிகள் சுமார் 500 மாணவர்களுக்கு உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், ரிலையன்ஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது