“நான் இப்டி செய்தால் விராட் ஹேப்பி ஆகிடுவார்”.. இதெல்லாமா வெளியில சொல்லுவீங்க அனுஷ்கா!

சென்னை: விராட் கோலியின் உடைகளை அவ்வப்போது தான் அணிந்துகொள்வேன் என நடிகை அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் தான் பாலிவுட்டின் ஹாட் கப்புள்ஸ். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரல் தான்.

சமீபத்தில் கூட விராட்டும், அனுஷ்காவும் பூட்டானில் மலையேற்றம் சென்றிருந்தனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் தான் என்ன செய்தால் விராட் மகிழ்ச்சி அடைவார் என்பது குறித்து அனுஷ்கா தெரிவித்துள்ளார். அதாவது கணவர் விராட்டின் உடைகளை அவ்வப்போது தான் அணிந்துகொள்வேன் என அனுஷ்கா கூறியுள்ளார். இதனால் விராட் மிகவும் சந்தோஷப்படுவாராம். அதற்காகவே தான் விராட்டின் டிசர்ட், ஜாக்கெட் போன்றவற்றை அணிந்து கொள்வேன் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மாவின் இந்த பேட்டி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. இருவருக்கும் இடையே உள்ள காதலை நினைத்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.