இலங்கையின் கிராமத்து வாழ்க்கையை படமாக்கும் யூரியுப் தொடர் – Strange Traveller – 01

இலங்கை வவுனியாவை சேர்ந்த முண்னனி புகைப்பட கலைஞரான சன் சைன் டி ஹர்ஷி என்பவர் தற்போது ஒரு YouTuber ஆக புதிய முயற்சியொன்றை கைகொண்டுள்ளார்.

அதாவது இவர் இலங்கையின் வரலாற்று பிரசித்தம் வாய்ந்ததும்,தனிதுவம் வாய்ந்ததுமான பல்வேறு இடங்களிற்கு நேரடியாக சென்று அவற்றை உணர்வு பூர்வமான வீடியோ காட்சிகளாக்கி Strange Traveller எனும் YouTube தொடர் ஊடாக வெளியிட்டு வருகின்றார்.

இதன் மூலம் இலங்கையின் சிறப்பம்சங்களை அறிய முடிவதுடன் ,இலங்கை பற்றி அறியாதவர்களுக்கும், வெளிநாடுகளில் வாழும் தமிழரும் தற்போதைய இலங்கையின் நிலை பற்றி அறிவதற்கும் உத்தியாக உள்ளது.இளம் சந்ததியினரின் இவ்வாறான முயற்சிகள் பாராட்டத்தக்கவை.