செம ரொமான்ஸ்.. காதலருடன் நியூயார்க்கில் பிறந்த நாளை கொண்டாடும் நயன்தாரா! வைரலாகும் போட்டோ!

நடிகை நயன்தாரா தனது காதலருடன் ரொமான்டிக்காக பிறந்தநாளை கொண்டாடும் போட்டோ வெளியாகியுள்ளது.

தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா, இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் காதல், டூயட் என ஒரே ரூட்டில் சென்றார் நயன்தாரா.

முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்துவிட்டார். நானும் ரவுடிதான் படத்தில் காது கேளாத பெண்ணாகவும் அறம் படத்தில் நேர்மையான அதிகாரியாகவும் நடித்து தனக்கான ட்ராக்கை மாற்றியிருக்கிறார் நயன்தாரா.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை கேட்டு தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, பண விஷயத்தில் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்யாதவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக இருந்து வருகிறார்.

தொடர் காதல் தோல்விகள், மன உளைச்சல் என்று சோதனைகளை சந்தித்த போதும் துவண்டுவிடாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஏராளமான ஏமாற்றங்களை சந்தித்த போதும் மனம் தளராமல் சாதித்து வருகிறார் நயன்தாரா.

தனது காதலருடன் பிறந்த நாளை கொண்டாடும் நயன்தாரா அவருடன் நெருக்கமாக போட்டோக்களையும் எடுத்துள்ளார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருவரின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் அமெரிக்காவில் ஒன்றாக பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் மற்றும் குஷி கபூரை நேரில் சந்தித்தார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.